search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி கட்டிடம்"

    • புதிய பள்ளி கட்டிடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்
    • மாணவர்களை மரத்தடியில் உட்கார வைத்து பாடம் நடத்துவதாக புகார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் மொத்தம் 196 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மழை நீர் பள்ளி வளாகத்தில் நின்றதாலும், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் பாதுகாப்பு கருதி வளையாம்பட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் சில மாதங்களாக பள்ளி இயங்கி வந்தது.

    பாதுகாப்பு கருதி சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட கல்வித்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பள்ளி அமைந்துள்ள இடம் அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு மீண்டும் பள்ளி கட்டிடங்கள் கட்ட தடையாக உள்ளது என கூறப்படுகிறது.

    தற்காலிகமாக பள்ளி இயங்கி வந்த அரசு கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால் மீண்டும் பழைய இடத்திலே பள்ளி இயங்க தொடங்கினர்.

    இங்கு பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஒரு வகுப்பறையில் 2 வகுப்பு மாணவர்கள் அமர வைத்தும், ஆசிரியர்கள் தனித்தனியாக பாடம் நடத்தி வருகின்றனர்.

    சில வகுப்புகள் மரத்தடியில் மாணவர்களை உட்கார வைத்து பாடம் நடத்துவதால் மரத்தில் உள்ள பூச்சிகள் மாணவர்கள் மீது அவ்வப்போது விழுந்து மாணவர்கள் பாதிப்ப டைந்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று சில மாணவர்களுக்கு பூச்சிகள் கடித்து அதிகமாக அரிப்பு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்ற தகவல் கல்வி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    தகவலின் பேரில் ஆலங்காயம் ஒன்றிய வட்டார கல்வி அதிகாரி சித்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அதிகாரியை முற்றுகையிட்ட பகுதி மக்கள் சம்பவம் குறித்து பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாகவும் ஆகையால் பள்ளி தலைமை ஆசிரியர் மாற்ற வேண்டும், அதே நேரத்தில் பள்ளி கட்டிடமும் விரைவாக கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

    • 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
    • இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். மேலும் இந்த பள்ளியானது கடந்த 2005 ம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்டநிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருவதாகவும்,பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத்தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்வதாகவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றும், எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை பராமரித்தும்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்கவேண்டும். இவ்வாறு கரைப்புதூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு
    • ஒன்றிய குழு தலைவர் தகவல்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றிய குழு கூட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமை வகித்தார்.

    அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி வரவேற்றார், ஒன்றிய குழு துணை தலைவர் ஜி மோகன் குமார் முன்னிலை வகித்தார், கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    திருமதி திருமுருகன் ஒன்றிய குழு தலைவர்; ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஊராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை, பள்ளி கட்டிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தலா ரூ4, லட்சம் வீதம் ரூ.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சின்னத்தம்பி (அதிமுக) மட்றபள்ளி கிராமத்தில் வார சந்தைக்கு குறைந்தது 1000 மாடுகள், ஆடுகள், விற்பனைக்கு வருகிறது மாடுகளை லாரியில் இருந்து இறக்க சாய்வு தளம் ஏற்படுத்தி தர வேண்டும்

    டாக்டர் லீலா சுப்ரமணியம் (அதிமுக;) ஆதியூரிலிருந்து எலவம்பட்டி செல்லும் சாலையில் மின்சார கம்பிகள் 3 அடி மேலே கையில் தொடும் அளவில் உள்ளது. இதனால் விபத்துக்கள் நேரலாம் உடனடியாக கந்திலி ஒன்றியம் சார்பில் மின்சார துறைக்கு கடிதம் எழுதி மின்சார கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும், மேலும் ஆதியூர் முதலியார் தெரு பகுதியில் தண்ணீர் ஏற்படுத்தி தர வேண்டும், ஆலமரத்து வட்டம் பகுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும்

    சாந்தகுமார் (திமுக;) : அருந்ததியர் காலனி வீடுகள் முழுவதும் பழுதடைந்து உள்ளது உடனடியாக புதிய வீடு கட்டி தர வேண்டும் அல்லது அந்த வீடுகளை பழுது பார்த்து தர வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி தரவேண்டும், லக்கினநாரக்கன்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்டு வரும் தார் சாலை இரண்டு வருடமாக போடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது உடனடியாக சாலை போட நெடுஞ்சாலைத்து றையினருக்கு கடிதம் எழுத வேண்டும்.

    தலைவர் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

    கந்திலி ஊராட்சி உடையாமுத்தூர் சமத்துவபுரத்தில் வீடுகள் புனரமைப்பு செய்ய வெளிப்புறத்தில் கம்பி வேலிகள் அமைக்கவும் அங்கன்வாடி கழிப்பறைகள் பழுது பார்ப்போம். பெரியார் சிலைக்கு சுற்று சுவர் அமைக்க ரூ 6 லட்சத்து 25 ஆயிரம் செலவு செய்ய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கலாம். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது‌ இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நன்றி கூறினார்‌.

    • திருமங்கலம் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள புல்லமுத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் இருக்கிறது. மாணவ-மாணவிகள் இங்கு தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் திருமங்க லம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், இதனால் வெளியில் வைத்து சமைப்பதாகவும், மழை காலங்களில் மாணவ-மாணவிகள் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் மின்விளக்குகள் இல்லை. பள்ளி முன்பு மழை நீர் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
    • வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள

    இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 4 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும் என 2 கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டிடம் எனக்கூறி 4 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு கல்வி பயின்று வந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1 முதல் 3-ம் வகுப்பிற்கான கட்டிடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் சிறிய கட்டிடத்திற்குள் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இறுக்கமான சூழ்நிலையில் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இது தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்கள் தெரிவிக்கையில், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கிருந்த பிள்ளைகள் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி

    றிய கட்டிடம் ஆகையால் இறுக்கமான சூழ்நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது ஒரே கட்டிடத்திற்குள் 90 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

    இதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். மேலும் வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது.

    மதிய உணவு வேளையில் சாப்பிடக்கூட இடம் இல்லாமல் வெட்ட வெளியில், வெயிலில் உட்கார்ந்து பிள்ளைகள் சாப்பிடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது.

    தற்போது கொரொனா பரவும் சூழலில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இங்கு மட்டும் நெருக்கடியில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கூடத்தை சுற்றி இருந்த சுற்றுச்சுவர்கள் இடிந்து கீழே விழுந்ததால், முள்கம்பிகளை கொண்டு தற்காலிகமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வேலி வழியாக கிராமத்திலிருக்கின்ற நாய்கள் முழுவதும் பிள்ளைகள் சாப்பிடும்போது உள்ளே நுழைந்துவிடுகிறது. எனவே பிள்ளைகளை இங்கு படிக்க வைக்கவே அச்சமாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    எனவே தமிழக முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முன்பிருந்தது போல் புதிதாக ஒரு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர கேட்டுக்கொண்டனர்.

    ×